மங்களூரிலிருந்து ஹைதராபாத் அருகே உள்ள கச்சிகோடு வரை செல்லும் 17655 விரைவு ரயில் வண்டி இன்று காலை கோவை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
அப்போது, ரயில் கழிப்பறை ஒன்று தாழிடப்பட்டு திறக்க முடியாததால் பயணிகளில் ஒருவர் புகார் அளித்துள்ளார். அங்கு வந்த ஊழியர்கள் கழிப்பறையின் உள்ளே ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு கதவை திறந்து பார்த்தபோது அவர் இறந்து கிடப்பது தெரிய வந்த்து.
இதுகுறித்து ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வந்த ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இறந்தவர் கடலூரை சேர்ந்த செல்வம் (49) என்பதும், லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததாகவும், கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சொந்த ஊரான கடலூருக்கு செல்ல ரயில் பயணசீட்டு பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை 4.15 மணியளவில் கழிப்பறைக்கு சென்றபோது மாரடைப்பால் அவர் மரணமடைந்தது விசாரணையில் தெரியவந்தது.