தமிழகத்தில் உள்ள அனைத்து கைவினை கலைஞர்களுக்கும் அவர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் பகிந்துகொள்ள இணையபக்கம் உருவாக்க தமிழ்நாடு கைதிறன் தொழில் வளர்ச்சி கழகதிற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கைத்திறன் தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொருவரின் தனி திறமைகள் குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கபட்டு இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும் போது விபரங்கள் அனைத்தும் அரசு கவனதிற்கு வருவதுடன் சமூக வலைதளங்கள் மூலம் உலகளாவிய சந்தையினை சென்று அடை வழிவகை செய்யும் வகையில் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும், நிறுவனம் சார்பில் கணப்கெடுக்க வரும் அதிகாரிகளுக்கு கைவினை கலைஞர்கள் அவர்களது தயாரிப்பு மற்றும் விபரங்களை அளித்து பயன் பெறுமாறும், அதற்கான படிவத்தினை http://www.tnhdcltd.com என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழக மேலான் இயக்குநர் தெரிவித்துள்ளார்.