எல்லன் மருத்துவமனை மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி காவல்துறை ஆணையரிடம் இந்திய மருத்துவ சங்கத்தினர் மனு

கோவை காந்திபுரம் எல்லன் மருத்துவமனையில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி காவல் துறை ஆணையர் அமல்ராஜிடம் இந்திய மருத்துவ சங்கத்தினர் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியில் உள்ள எல்லன் மருத்துவமனையில் புதனன்று சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட பிரதீப்குமார் என்ற வாலிபர் திடீரென உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே இளைஞர் உயிரிழந்தார் எனக் கூறி அவரது உறவினர்கள் ரகளையில் ஈடுபட்டு மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்ததுடன், மருத்துவர் ராமசந்திரனையும் தாக்கியதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக ரத்தினபுரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்க கோவை கிளை நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜுடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள், மருத்துவமனை தரப்பில் தவறுகள் நடந்து இருந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்காமல் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துவதும், மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் தவறானது. தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து அவர்கள் மீது மருத்துவமனைகள் பாதுகாப்பு சட்டம் 2008-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

இதனிடையே, இறந்த பிரதீப்குமாரின் உடல் இன்று கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...