தமிழக வனத்துறையில் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய கோவையில் உடற்தகுதி தேர்வு


தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 181 காலிப்பணியிடங்களை நிரப்பிடும்பொருட்டு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் இருந்து 36 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தநிலையில், பல்வேறு கட்டத் தேர்வுகளுக்குப் பின் அதில் 905 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.



இவர்களுக்கான உடற்தகுதித் தேர்வு சென்னை அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் 2016 டிசம்பர் அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அப்போது ஏற்பட்ட வர்தா புயலின் காரணமாக அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அந்த உடற்தகுதித் தேர்வு கோவை மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்றது. தமிழக வனத்துறைக்கென கோவையில் உடற்தகுதித் தேர்வு நடைபெற்றது இதுவே முதன்முறையாகும்.



இந்த உடற்தகுதித் தேர்வில் ஆண்களுக்கு 25 கிலோ மீட்டர் ஓட்டப்போட்டியும், பெண்களுக்கு 16 கிலோ மீட்டர் ஓட்டப் போட்டியும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு உடற்தகுதி ஆய்வு செய்யப்பட்டது.

இதுகுறித்து, தமிழ்நாடு வனத்துறை பணிநியமன ஆணையத் தலைவர் பி.ஜெகதீஷ் நமது நிருபரிடம் கூறுகையில், முன்னதாக மண்டல அளவில் வனத்துறை காலிப்பணியிடத்திற்கான தேர்வு நடைபெற்று வந்தது. பின், இதனை ஒருங்கிணைத்து நடத்த 2012-ம் ஆண்டு இந்த பணிநியமன ஆணையம் உருவாக்கப்பட்டது. 2015-யில் வனத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் பெறப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இத்தேர்வு நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்றுள்ள உடற்தகுதித் தேர்வில் 905 விண்ணப்பதாரர்கள் பங்கேற்றுள்ளனர், அதில், 270 பேர் பெண்களாவர்" என்றார்.



மேலும் அவர் கூறுகையில், தமிழக வனத்துறை முழு பணிப்பாதுகாப்பு உள்ள துறையாகும். மக்களுக்கு இதுகுறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனாலேயே தற்போது ஏராளமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களிலும் இளைஞர்கள், பெண்கள் இதில் அதிகமாக பங்கேற்று தேர்வு பெற வேண்டும்" என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...