ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டிட கழிவுகள் மறுசுழற்சி ஆலைக்கான திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது- மாநகராட்சி ஆணையர் தகவல்


கோவை மாநகராட்சியில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் ஐந்து மண்டலங்களின் அனைத்து வார்டுகளுக்கும் 100 மெட்ரிக் டன் கொள்ளளவிலான கட்டிட கழிவுகளை கொண்டு மறுசுழற்சி செய்யக்கூடிய ஆலையினை தனியார் பங்களிப்புடன் நிறுவுவதற்கான திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களின் அனைத்து வார்டுகளுக்கும் 100 மெட்ரிக் டன் கொள்ளளவிலான கட்டிட கழிவுகளை கொண்டு மறுசுழற்சி செய்யக்கூடிய ஆலையினை தனியார் பங்களிப்புடன் நிறுவுதல் திட்டப்பணியினை தமிழக அரசின் திடக்கழிவு மேலாண்மை சிறப்பு நிதியின் கீழ் ரூ.1257.96 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

மேற்கூறிய திட்டப்பணிக்கான கட்டுமான மூலதன செலவான ரூ.9 கோடி தொகை முழுவதினையும் தனியார் முதலீட்டுடன் நிறுவி அதனைத் தொடர்ந்து இயக்குதல் மற்றும் பராமரிப்புகளுக்கான செலவினத்தினை டிப்பிங் கட்டண முறையில் கோவை மாநகராட்சியால் ஏற்கும் வண்ணம் திருத்தி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் மேற்கூறிய திட்டப்பணிக்கு கடந்த 28.10.2016-ல் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட பின் மூன்று நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தபுள்ளிகள் பெறப்பட்டதில் தி/ள் நியுவே இன்ஜினீயர்ஸ்  எம்.எஸ்.டபுள்யு பிரைவேட் லிமிடெட், சென்னை நிறுவனத்தினர் கொடுத்துள்ள குறைவான ஒப்பந்தப்புள்ளியினை மாமன்றத்தின் அனுமதி பெற்று உக்கடம் பகுதியில் அமைந்துள்ள இம்மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பிலான நிலம் 20 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் ஒதுக்கப்பட்டும், கட்டுமான பணிகள் வெகு விரைவில் துவக்கப்படவுள்ளது. மேலும், அனைத்து பணிகளும் நான்கு மாத காலத்தில் முடிக்கப்படும். 

மேலும், இத்திட்டதில் மாநகராட்சியின் 100 வார்டுகளில் சேகரமாகும் சுமார் 100 மெட்ரிக் டன் கொள்ளளவிலான கட்டிட கழிவுகளை ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள 17 இடங்களில் இம்மாநகராட்சியால் கொண்டு சேர்க்கப்படும். அவற்றினை தனியார் நிறுவனத்தாரால் எடுத்துச் சென்று உக்கடம் பகுதியில் நிறுவப்படும் மறுசுழற்சி ஆலையில் செங்கல், பேவர் பிளாக்குகள் கெர்ப் கற்கள் போன்றவைகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படும். 

அதனைத் தொடர்ந்து மாநகராட்சியின் சாலையோரங்கள், குளக்கரையோரங்கள், நீர் வழித்தடங்கள், மழை நீர் வடிகால்கள் போன்றவற்றில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுவது முழுவதுமாக தடுக்கப்படும். மேலும் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவ நிலை மாற்றம் அமைச்சகத்தால் இயற்றப்பட்ட கட்டிட கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016-ல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை முழுவதனையும் கட்டிட கழிவு உற்பத்தியாளர்களான பொது மக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் ஆகியோர் பின்பற்றி கோவை மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...