கோவை அருகே இருகூரில் உதவி பேராசிரியை லதா, அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தவர் லதா. இவரது கணவர் சிவலிங்கத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவை இருகூர் ஐ.ஓ.பி காலனி பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், இன்று காலை லதாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த ராணி என்பவர் லதாவின் வீட்டிற்கு சென்ற போது உடல் முழுவதும் எரிந்த நிலையில் லதா இறந்து கிடந்துள்ளார். மேலும் கழுத்து அறுக்கப்பட்டதற்கான தடயங்களும் இருந்துள்ளது.
இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சம்பவம் நடந்த இடத்தின் அருகே சாம்பார் பொடி தூவப்பட்டு இருந்ததும், உதவி பேராசிரியரை லதா நிர்வாண நிலையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், அவரை கற்பழித்து கொலை செய்து பின் எரித்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகின்றனர்.
மேலும், இறந்த பேராசிரியையின் வீட்டில் இருந்து பொருட்கள் எதுவும் திருடப்பட்டு இருக்கின்றதா என்பது குறித்தும், வீட்டிற்கு யார் வந்து சென்றுள்ளார்கள் என்பது குறித்தும் சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.