கவின்ஸ்கேர் நிறுவனத்தின் பால் பொருட்கள் பிராண்டான கவின்ஸ் ஃப்ரீடம் டிரஸ்ட் "வாக் இந்தியா" செயல்திட்டத்தோடு ஒருங்கிணைந்து கால் இழந்த 100 மாற்றுத்திறனாளிகளுக்க செயற்கை உபகரணங்கள் வழங்கியுள்ளது.

பல்வேறு துறைகளில் செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் பெருநிறுவனமான கவின்கேரின் முதன்மை பிராண்டாகத் திகழும் கவின்ஸ், கால் இழந்த 100 மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்க்கையில் அளவற்ற மகிழ்ச்சியும், நம்பிக்கை ஒளியையும் ஏற்படுத்தும் விதமாக சென்னையை தலைமையகமாகக்கொண்டு செயல்படும் ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனமான ஃப்ரீடம் டிரஸ்ட்டால் ஏற்பாடு செய்யப்பட்ட "வாக் இந்தியா" செயல்திட்டத்தின் மூலம் செயற்கை உறுப்புகளை வழங்கியுள்ளது.
இந்நிறுவனத்தின் ஈரோடு பால் பண்ணை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் மூலம் இந்த செயற்கை உடல் உறுப்புகளை பெற்றவர்கள் மத்தியில் நம்பிக்கையும், வலுவான மன உறுதியும் அபரிமிதமாக உருவாவதற்கு வகை செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிகழ்விற்கு கவின்கேர் பிரைவேட் லிமிடெட்டின் இணை நிர்வாக இயக்குநர் டி.மோகன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு இந்நிறுவனத்தின் பிற முதுநிலை அலுலர்களுடனும், டிரஸ்ட் பிரதிநிதிகளுடனும் இணைந்து செயற்கை கால்களை வழங்கினார்.
இதுகுறித்து கவின்கேர் பிரைவேட் லிமிடெட்டின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான சி.கே.ரங்கநாதன் கூறியதாவது:- 'பாகுபாடின்றி அனைவரையும் உள்ளடக்கிய, குறிப்பாக மாற்றுத்திறன்களைக் கொண்டிருக்கும் நபர்களுக்கான ஒரு உகந்த சமுதாயத்தை உருவாக்குவதில் கவின்கேர் நிறுவனம் பல ஆண்டுகளாக சிறப்பு கவனத்தை செலுத்தி வந்திருக்கிறது.
தற்போது, ஃப்ரீடம் டிரஸ்ட் என்ற அமைப்பின் "வாக் இந்தியா" என்ற செயல்திட்டத்தோடு இணைந்திருப்பதும், இத்தகைய நபர்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வ மாற்றத்திற்கான பங்கை ஆற்றுவதும் உண்மையிலேயே மனதிற்கு மகிழ்ச்சியும் நிறைவும் அளிப்பதாக இருக்கிறது.
கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஈரோடு நகரிலும் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் பல சிறப்பு முகாம்களும் இதற்காக நடத்தப்பட்டன. தன்னார்வலர்களும் மற்றும் டிரஸ்ட்டிஐ சேர்ந்த வல்லுநர்களும், கை, கால் போன்ற உடலுறுப்புகளை இழந்து வாடும் நபர்களை நேரடியாக சந்திப்பதற்காகவும் மற்றும் அவர்களுக்கு பொருத்தமான செயற்கை கால்களை உருவாக்குவதற்காக அவர்களது அளவீடுகளை எடுப்பதற்காகவும் அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு தேர்வுசெய்யப்பட்ட 100 நபர்களுக்கு, அவர்களுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட செயற்கை உடலுறுப்புகளை தயாரிக்கும் பணி நிறைவடைந்து தற்போது அவர்களிடம் அவைகள் வழங்கப்பட்டுவிட்டன" என்றார்.
கவின்கேர் பிரைவேட் லிமிடெட்டின் இணை நிர்வாக இயக்குநர் டி.மோகன் பேசுகையில், இச்செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் கவின்கேர் முழு மகிழ்ச்சியடைகிறது. இந்த முகாம்களை நடத்தியதற்காகவும், உடலுறுப்புகள் இழந்தவர்களை அடையாளம் கண்டதற்காகவும் மற்றும் இன்றைய நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு தங்களது ஆதரவை வழங்கியதற்காகவும் ஃப்ரீடம் டிரஸ்ட் குழுவினர் மற்றும் கவின்கேர் நிறுவனப் பணியாளர்களை நான் மனதார பாராட்டுகிறேன்.
ஈரோட்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நமது இந்த கூட்டுமுயற்சியானது, உடலுறுப்பு இழந்தவர்களின் வெற்றிகரமான வாழ்க்கைப் பயணத்தில் ஒரு அர்த்தமுள்ள முன்னேற்றத்தை நோக்கிய ஒரு ஆக்கப்பூர்வமான அடிக்கல்லாக அமையும் என்பது நிச்சயம்" என்று கூறினார்.
ஃப்ரீடம் டிரஸ்ட்டின் நிறுவனரும், நிர்வாக அறங்காவலருமான டாக்டர். எஸ்.சுந்தர் பேசுகையில், உடல் உறுப்பை இழந்ததன் காரணமாக ஊனமடைந்திருக்கும் ஒரு நபரால் அவரது தினசரி பணிகளை மேற்கொள்ள இயலாது. அத்துடன் அவரது பணியமைவிடத்திற்கும் போகவும் முடியாது.
இத்தகைய மாற்றுத்திறனாளிகள் பணியமர்த்தப்படக்கூடியவர்களாக இருக்கின்றனர். அநேக நேரங்களில் பொருளாதார பற்றாக்குறை அல்லது பிறரைப்போல் போய்வருவதற்கான வசதியின்மை ஆகியவையே இவர்களை வீடுகளிலேயே முடங்கிக்கிடக்குமாறு செய்கிறது. கண்ணியத்தோடு வாழ்க்கையை இவர்கள் நடத்துவதற்காகவும் மற்றும் தங்களை கவனித்துக்கொள்பவர்கள் மீது சார்ந்திருப்பதை தவிர்ப்பதற்காகவும் செயற்கை உடல் உறுப்புகள் பொருத்தப்பட வேண்டிய அவசியம் இவர்களுக்கு இருக்கிறது.
இச்செயல்திட்டம் அதன் மிகப்பெரிய சாதனையளவை எட்டுவதற்கு உதவ மற்றும் இதற்கு ஆதரவு வழங்க கவின்கேர் தாராளமனதுடன் முன்வந்தது குறித்து நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். பிற விஷயங்களோடு, சமுதாயத்தின் ஊனமுற்ற நபர்களுக்கு தோழமையாக செயல்படும் சமுதாயம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்கையில், வாக் இந்தியா பரப்புரை திட்டம் இன்னும் பல மைல்கல் சாதனைகளை நிகழ்த்துவதற்கு இது வழிவகுக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்று கூறினார்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில், கால்களை இழந்த நபர்களுக்கு செயற்கை கால்களை அதிக கவனத்தோடு பொருத்தி அவர்களை நடக்குமாறு செய்வதற்கு தொழில்முறை நிபுணத்துவ உதவியை வழங்குவதற்கு இயன்முறை மருத்துவ பணியாளர்கள் மற்றும் பிற தன்னார்வலர்கள் இந்நிகழ்வில் அதிகளவில் பங்கேற்றனர்.