கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டுவருகிறது.
இந்த கல்லூரியில், சிங்காநல்லூர் அருகே உள்ள 'ப்ரைட்ஸ் ஈவன்ட்ஸ்' என்ற தனியார் வேலைவாய்ப்பு அமைப்பினர் ஒருங்கிணைத்த வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை தொடங்கியது. இந்த முகாமில் கலந்து கொள்ள கோவை ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பல முன்னனி நிறுவனங்கள் வரும் என்றும், வேலைவாய்ப்பு உருவாக்கித்தரப்படும் என்றும் ப்ரட் ஈவன்ட்ஸ் என்ற தனியார் அமைப்பின் சார்பில் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து ரூ.300 வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வேலை வாய்ப்பு முகாமிற்கு 26 பெரிய நிறுவனங்கள் வருதாக கூறப்பட்ட எந்த நிறுவனமும் வரவில்லை என்றும், தங்களிடம் இருந்து வசூலித்த பணத்தை திரும்ப தர வலியுறுத்தியும் மாணவர்கள் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதை தொடர்ந்து, சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.