கோவை மாவட்டத்தில் உள்ள 17 ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்களில் வசிக்கும் சிறுவர், சிறுமியர்கான விளையாட்டுப்போடிகள் கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் நடைபெற்றது.

மாநகர காவல்துறையினர் நடத்திய இந்த போட்டியில் 700-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றனர்.
மொத்தம் 44 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகர துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) லட்சுமி பரிசுகளை வழங்கினார்.