ரயில் பயணத்தில் பயணிகளின் சேவை மற்றும் மனநிறைவினை மேம்படுத்தும் நோக்கில் சேலம் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயிலில் ரயில்வே வர்த்தக பிரிவு அதிகாரிகளால் முழுமையான சோதனை நடைபெற்றது.

இந்த ஆய்வின் மூலம், ரயில் பெட்டியில் பயணிகளுக்கான சேவைகள் சரியாக உள்ளதா, அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்கள், அங்கீகரிக்கப்படாத பயணிகள், பயணச் சீட்டு பெறாத பயணிகள், பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டது.
சேலம் பிரிவு வர்த்தக மேலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் விஜூ வின் தலமையில் நடைபெற்ற இந்த சோதனை, கோவை மற்றும் சேலம் இடையிலான ரயில் பெட்டியிலும், திருவனந்தபுரம் - இந்தூர் அகல்யா நகரி எக்ஸ்பிரஸ் (22646), ஹைதராபாத்- சபரி எக்ஸ்பிரஸ் திருவேந்ரம் (17229) ஆகிய ரயிலிலும் நடைபெற்றது.

இச்சோதனையின் போது 104 பேர் பயணச் சுட்டு இல்லாமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து மொத்தம் 39 ஆயிரத்து 90 ரூபாய் அபராதம் வசூழிக்கப்பட்டது. 8 அங்கீகரிக்கப்படாத உணவு விற்பனையாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் ஆர்பிப்-யிடம் ஒப்படைக்கப்பட்டு பின் அவர்களிடம் இருந்து 3 ஆயிரத்து 800 ரூபாய் அபராதமாக வசூழிக்கப்பட்டது. மேலும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஒரு திருநங்கை நபர் எச்சரிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் பயணிகளிடம் ரயில் பயணம் குறித்து கேட்டறிந்தனர். அப்போது, அதிகாரிகளின் இந்த சோதனை மகிழ்ச்சியளிப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.