கோவை காருண்யா நகரை அடுத்த பச்சினம்பதி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணிய பெருமாள். இவரது மகள் மனோ (20). இவர் காருண்யா கல்லூரி விடுதியில் தங்கி பி.டெக் 3ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 6ம் தேதியன்று சுப்பிரமணிய பெருமாளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில், ஒரு இளைஞர், நான் உனது மகளை கூட்டிச் சென்றுவிட்டதாக கூறிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, சுப்பிரமணிய பெருமாள், காருண்யா காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சுப்பிரமணிய பெருமாளை தொலைபேசியில் அழைத்தது அதேப் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (25) என்பது தெரியவந்தது. மேலும், சிவகுமார் மற்றும் மனோ காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, காவல் துறையினர் இருவரையும் தேடிவருகின்றனர்.

இதனிடையே, பெண்ணை மீட்டுத்தரக் கோரி அக்கல்லூரி முன்பு பெற்றோர் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.