கோவை காந்திபார்க் பகுதியில் 20க்கும் மேற்பட்ட அலைகுடி மக்கள் சாலையோரங்களில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீடு இல்லாமல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரங்களில் வசித்து வரும் நிலையில் வீடு வழங்கக் கோரி பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

இதனிடையே, சமீபத்தில் சாலையோரங்களில் வசித்த கூடை பின்னுபவர்கள் சிலருக்கு வீடு வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தங்களுக்கும் வீடு வழங்க வேண்டும் எனக் கோரி அலைகுடி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேளம் அடித்து, சாட்டயால் தங்களைத் தாக்கி நடனம் ஆடி நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தங்களுக்கு வீடு இல்லாததால் குழந்தைகளை படிக்கக் கூட வைக்க முடியவில்லை எனவும், தங்கள் குழந்தைகள் படிக்க வசதியாக தங்களுக்கும் வீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அலைகுடி மக்கள் வலியுறுத்தினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்கு அலைகுடி மக்கள் மேளம் இசைத்து நடனமாடியபடி நூதன முறையில் மனு அளிக்க வந்தது பரபரப்பினை ஏற்படுத்தியது.