சீராக குடிநீர் விநியோகிப்பது குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  வறட்சி பாதிப்பு மற்றும் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் வேலுமணி, அனைத்து மாவட்டங்களிலும் வறட்சி தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழகம் வறட்சி மாநிலம் என அறிவித்து பயிர்களுக்கு தகுந்தபடி நிவாரணம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.



கோவை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர் கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். குடி நீர் பற்றாகுறை சூழலை பயன்படுத்தி  சிலர் போராட்ட சூழல்களை  ஏற்படுத்துவதாகவும், இதனை தவிர்த்து முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் 140 வருடங்களுக்கு பின்னர் கடும் வறட்சி நிலவும் நிலையில் பொதுமக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினை அதிகரிக்கும் நிலையில், சிறுவாணி அணையில் தேங்கி இருக்கும் தண்ணீரை உறிஞ்சி எடுத்து  கோவை கொண்டு வருவது தொடர்பாக கேரள அதிகாரிகளுடம் தமிழக அதிகாரிகள்  கடந்த இரு தினங்களாக பேச்சுவார்த்தை  நடத்தி வருவதாகவும், விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் வறட்சி தொடர்பாக அறிவிக்க மத்திய அரசு சில விதிமுறைகளை வைத்து இருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர், தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், வறட்சி தொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டு விட்டது எனவும் தெரிவித்த அமைச்சர் வேலுமணி  மத்திய அரசிடம் தேவையாக நிதியை  தமிழக அரசு கேட்டுப்பெறும் எனவும் மத்திய அரசும் மக்கள் பிரச்சினையை கருத்தில் கொண்டு உதவ முன்வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாநகராட்சி, குடிநீர்வடிகால் வாரியம், வேளாண்மை துறை, வருவாய் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...