பருவமழை பெய்யாததால் தமிழ்நாட்டில் பெரும் வறட்சி நிலவி வருக்கிறது. நாளுக்கு நாள் விவசாயிகளின் தற்கொலை தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாடு வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை மாறவும், தமிழ்நாட்டில் மழை பொழிய வேண்டும் என்றும் சிறப்பு பிராத்தனை பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக, உக்கடம் கோட்டைமேடு வின்சென்ட் ரோடு சாலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் தமிழ்நாட்டில் மழை பெய்ய வேண்டும்மென சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட முஸ்லீம் சகோதர்கள் ஒன்றாக இனைந்து கூட்டு தொழுகையில் ஈடுபட்டு, சிறப்பு பிராத்தனை மேற்கொண்டனர்.