கோவை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி சாலையில் உள்ள ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலய பள்ளி மற்றும் கல்லூரிகளில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி கல்விக்குழுமங்களின் செயலர் தனலட்சுமி ஜெயச்சந்திரன் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மஹா வித்யாலய கல்லூரிகளில் மாணவர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து பொங்கல் வைத்தும் நடனம் ஆடியும் பொங்கல் விழாவினை கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோல் அருகில் உள்ள ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பாரம்பரிய உடை அணிந்தும் பள்ளிகளில் கடைகள் அமைத்தும் திருவிழாவை போன்றும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதில், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலய கல்லூரி முதல்வர் பிரேமலதா, தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் அமைப்பாளர் பாலு, பேராசிரியர் விநாயகமூர்த்தி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.