கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் சார்பில் பொங்கல் விழா மண் மனம் மாறாமல், பாரம்பரிய முறைப்படி கல்லூரி வளாகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.



இந்நிகழ்வின் போது, அக்கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் பொங்கல் வைக்கப்பட்டதோடு பூக்கோலம் போடுதல், மருதாணி வைத்தல், உரி அடித்தல், கயிறு இழுக்கும் போட்டி மற்றும் பல விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக ஹலோ எஃப்எம் தொகுப்பாளர் மகா கலந்துகொண்டு பொங்கல் நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். இதைத்தொடர்ந்து கல்லூரி தாளாளர் முனைவர் எஸ்.தங்கவேலு, மாணவ, மாணவிகளுக்கு பொங்கல் திருநாளின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.