பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு?


பவானி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடியை அடுத்த தேக்குவட்டை என்ற இடத்திலும் மஞ்சக்கண்டி என்ற இடத்திலும் கேரள அரசு தடுப்பனை கட்ட முடிவு செய்துள்ளது. அணை கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.



இதற்காக அந்த பகுதிகளில் கட்டுமானப் பொருட்கள் குவித்து வைக்கபட்டுள்ளன. இந்த தடுப்பணையின் உயரம் 12 அடி அகலம் 30அடி நீளம் மற்றும் 200 அடி ஆழம் வரை இருக்கக்கூடும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. கேரள அரசின் இந்த முயற்சியால் கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாவர்.

முன்னதாக, சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கில் கேரள அரசு அணை கட்ட மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்திவைக்க அம்மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு இரு இடங்களில் தடுப்பணை கட்ட இருப்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து, கேரள அரசை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பிலும், ம.தி.மு.க சார்பிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.



Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...