பீட்டா அமைப்பினருக்கு மக்கள் மன்றத்தில் இருந்து விரைவில் தீர்ப்பு வரும் நடிகர் சூர்யா கருத்து


கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள கற்பகம் திரையரங்க வளாகத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சிங்கம் 3 திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி நடைபெற்றது. இயக்குநர் ஹரி நடிகர் சூர்யா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் முன்னிலையில் முன்னோட்ட காட்சியை வெளியிட்டனர்.



அப்போது பேசிய நடிகர் சூர்யா, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிச்சயமாக நடக்கும் என்றும் பீட்டா அமைப்பினருக்கு மக்கள் மன்றத்தில் இருந்து விரைவில் தீர்ப்பு வரும் என்றும் கூறினார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கூடிய இளைஞர்கள் கூட்டத்தை போல் விவசாயிகளின் பிரச்சனைக்கும் அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனவும் இளைஞர்கள் போராட்டத்தை வரவேற்பதாகவும் கூறிய அவர், தண்ணீர் பிரச்சனைக்கும் குரல் கொடுக்க இளைஞர்கள் முன் வர வேண்டும் எனவும் சூர்யா கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...