ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி கோவை வ.உ.சி. மைதானத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றாக திரண்டு போராட்டம் நடத்தினர்.

இன்று மதியம் 12 மணியளவில் தொடங்கிய இந்த போராட்டம் 7 மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வ.உ.சி மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த போதும் மாலை நேரத்திலும் மின் விளக்கு போட மறுக்கப்பட்டது. தொடர்ந்து, போரட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் தங்கள் கைபேசியில் இருக்கும் 'ப்ளாஷ்' லைட்டை ஒளிக்கச்செய்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, அங்கிருந்த மின்விளக்குகள் போடப்பட்டது. தற்போது போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.