கோவை துடியலூர் அருகே உள்ள வட்டமலை பாளையத்தில் செயல்பட்டு வரும் கங்கா உடல் நலவியல் மையத்தில் முதலாம் ஆண்டு பயிலும் செவிலிய மாணவ மாணவிகளுக்கு விளக்கு ஏற்றும் விழா செவ்வாயன்று கொண்டாடப்பட்டது.

இவ்விழாவினை கங்கா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் கனகவல்லி சண்முகநாதன் மற்றும் இதர பேராசிரியர்கள் குத்துவிளக்கை ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். கங்கா மருத்துவமனையின் இயக்குனர் ரமா ராஜா சேகரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

விழாவின் முக்கிய அங்கமான விளக்கேற்றும் விழா, அதாவது "உன்னத தொழிலான செவிலியர் தொழிலில் கல்வி பயிலும் காலத்தில் நன்கு செவிலியர் பயிற்சினை மேற்கொண்டு நோயாளிகளுக்கு சேவை செய்வேன்" என்று உறுதி மொழி மேற்கொள்ளும் நன்நாளில், விழாவின் சிறப்பு விருந்தினர் தன்னம்பிக்கை பேச்சாளர் டாக்டர். ஜெயந்திஸ்ரீ பாலகிருஷ்ணன், அன்னை ஜே.கே.கே சம்பூரணியம்மாள் செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர். தமிழ்மணி மற்றும் கங்கா செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர். எஸ்தர் ஜான் உள்ளிட்டு அக்கல்லூரியின் பேராசிரியர்களும் இணைந்து 68 இளம் செவிலிய மாணவ மாணவியர்களின் விளக்குகளை ஏற்றி வைத்தனர்.

அதனை தொடர்ந்து "கை விளக்கேந்திய காரிகையின்" உறுதி மொழியினை மேற்கொண்டு, இளம் செவிலிய மாணவ மாணவிகள் செவிலியர்களின் சின்னமான வெண்மை இருதய வடிவத்தில் அமர்ந்து அழகாய் காட்சியளித்தனர்.

விழாவின் ஓர் அங்கமாக, கங்கா மருத்துவமனையின் மயக்க மருந்தியல் துறையில் கல்வி இயக்குனர் மற்றும் சிடிஎல்எஸ் பாடப் பிரிவு இயக்குனர் டாக்டர். பாலவெங்கடசுப்ரமணியன், கங்கா கல்லூரியின் மற்றுமொரு பாடப் பிரிவான அலைடு ஹெல்த் ஸ்சையின்ஸ் முதலாம் ஆண்டு மாணவர்களை உறுதிமொழியினை ஏற்க செய்தார்.
இதைத்தொடர்ந்து, கல்லூரியின் அணைத்து பாட பிரிவுகளில் முதன்மை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விதமாக சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
தொடர்ந்து கங்கா மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் ஜே.ஜி. சண்முகநாதன், தோல் மாற்று அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர். ராஜசபாபதி மற்றும் எலும்பு மற்றும் முதுகுதண்டு துறைத்தலைவர் டாக்டர் ராஜசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இவ்விழாவிற்கு கங்கா செவிலிய பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் கல்லூரி முதல்வர் டாக்டர். எஸ்தர் ஜான் நன்றி கூறினார்.