கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று 28 வது சாலை பாதுகாப்பு வாரவிழா கடைபிடிக்கப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து ஊர்வலமாக சென்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இவ்விழாவை தொடங்கி வைத்தார். இதில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



