கோவை வ.உ.சி. மைதானத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 4 வது நாளாக நடக்கும் இந்த போராட்டத்திற்கு பல்வேறு தன்னார்வலர்கள் தண்ணீர் பாட்டில்கல், பிஸ்கட், பழங்கள் மற்றும் உணவுப்பொருட்களை வழங்கி வருகின்றனர். லாரிகளில் வரும் உணவுப்பொருட்கள் மைதானத்தின் ஓரத்தில் குவித்து வைக்கபட்டுள்ளது.

