ஜல்லிக்கட்டுக்கு போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோவையில் வணிகவளாகங்கள் இன்று முழு அடைப்பு செய்துள்ளதால் நகரின் முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாளான உணவகம், கடைகள் இன்று முற்றிலுமாக அடைக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதே போல், நகை கடை உரிமையாளர்கள் மற்றும் சிறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டு காணப்பட்டது. மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதே போல் மாணவர்களுடம் சேர்ந்து போராட தயாராக உள்ளதாகவும் ஏராளமான பொதுமக்களும், சிறு, குறு வணிகர்களும் தெரிவித்துள்ளனர்.