கோவை வ உ சி மைதானத்தில் நான்காவது நாளாக தொடரும் இளைஞர்களின் மாபெரும் எழுச்சி போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டிற்கு இளைஞர்களின் போராட்டம் வலுக்கு நிலையில், கோவையில் இரவு நேரங்கள் கூட பாராமல் பொதுமக்கள் கடும் பனியிலும் குடும்பங்களுடன் சென்றும் மாணவர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பொதுமக்களும் பெரும் ஆதரவினை மாணவர்களுக்கு அளித்து வருகின்றனர். போராட்ட களத்தில் மாணவர்களுக்கு மருத்துவ முகாம், உணவு பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டும் வருகிறது. மேலும் இரவு நேரங்களில் ட்ரம்ஸ், பறை இசைகள் போன்றவற்றை மூலமாகவும் இளைஞர்கள் நடனம் ஆடியும், பாரம்பரிய விளையாட்டுக்களான கம்பு சுத்துதல் போன்றவற்றை நிகழ்த்தியும் உற்சாகத்துடன் போராடி வருகின்றனர். மைதானத்தில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இனைந்து பீட்டாவை தடை செய்யக்கோரியும், ஜல்லிக்கட்டுக்கு மத்திய, மாநில அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் பல்வேறு முறையில் கோஷங்களை எழுப்பி போராடினர்.