ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வால்பாறை பகுதியில் இன்று முழு கடை அடைப்பு போராட்டம்

தமிழகத்தின் பழமைவாய்ந்த பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்ததை கண்டித்து நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் மாபெரும் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். 



அதன் ஒரு பகுதியாக வால்பாறையில் அரசுக்கல்லூரி மாணவ மாணவியர்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 



தொடர்ந்து இன்று பீட்டா அமைப்பை கண்டித்து ஒப்பாரி வைத்து, பாடை கட்டி கொக்க கோலா, பெப்சி போன்ற கார்பரேட் நிறுவனங்களின் குளிர்பானங்களை ஊர்வலமாக எடுத்துச்சென்று அடக்கம் செய்யவுள்ளனர். 



மேலும், வால்பாறையில் உள்ள வால்பாறை வட்ட வியாபாரிகள் சங்கம் மற்றும் வால்பாறை வணிகர் சங்கத்தினரும் மற்றும் வியாபாரிகளும் பீட்டாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...