தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் காரணமாக ரயில் பயண நேரத் திட்டத்தில் மாற்றம் மற்றும் சில ரயில்களை ரத்து செய்து சேலம் ரயில்வே கோட்ட நிலையம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
ரயில் எண் 76847- விருதாச்சலத்தில் இருந்து சேலம் வரை செல்லும் பயணிகள் ரயில் விருதாச்சலத்தில் இருந்து மின்னம்பள்ளி வரை மட்டுமே இயக்கப்படும்.
ரயில் எண் 76850- சேலம் முதல் விருதாச்சலம் வரையிலான பயணிகள் ரயில் மின்னம்பள்ளியில் இருந்து விருதாச்சலம் வரை மட்டுமே இயக்கப்படும்.
ரயில் எண் 76849- விருதாச்சலம் முதல் சேலம் வரை செல்லும் பயணிகள் ரயில் விருதாச்சலத்தில் இருந்து மின்னம்பள்ளி வரை மட்டுமே இயக்கப்படும்.
ரயில் எண் 76848- சேலம் முதல் விருதாச்சலம் வரையிலான பயணிகள் ரயில் மின்னம்பள்ளியில் இருந்து விருதாச்சலம் வரை மட்டுமே இயக்கப்படும்.
ரயில் எண் 56319- நாகர்கோவிலில் இருந்து கோவை வரும் பயணிகள் ரயில் கரூரில் இருந்து கோவை வரை மட்டுமே இயக்கப்படும்.
ரயில் எண் 56320- கோவை முதல் நாகர்கோவில் செல்லும் பயணிகள் ரயில் கரூர் வரை மட்டுமே செல்லும்.
ரயில் எண் 56514- பெங்களூரில் இருந்து காரைக்கால் செல்லும் விரைவு பயணிகள் ரயில் ஓமலூர் வரை மட்டுமே இயக்கப்படும். பின்பு ஓமலூரில் இருந்து மீண்டும் பெங்களூருக்கே செல்லும்.
ரயில் எண் 22638- மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில் சென்னை செல்லாமல் ஜோலார்பேட்டையில் நிறுத்தப்படும்.
ரயில் எண் 12680- கோவையில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்.
ரயில் எண் 12679- சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை வரும் இன்டர் சிட்டி விரைவு ரயில் காட்பாடியில் இருந்து புறப்படும்.