ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும். தமிழர்களின் வீரவிளையாட்டை எதிர்த்துள்ள பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என லட்சக் கணக்கானோர் ஒன்றிணைந்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்களின் இத்தகைய கலாச்சார பாதுகாப்பு போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தற்போது வரை உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால் அரசு நிர்வாகத்தினை எதிர்த்தும் தற்போது மாணவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, மாணவர்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும், தனியார் நிறுவனத்தினரும், தன்னார்வலர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவையில் மக்கள் ஆட்டோ சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேரணி
நடைபெற்றது.
இன்று மதியம் 3 மணி அளவில் மக்கள் ஆட்டோ சார்பில் நடைபெற்ற இந்த பேரணி கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் அருகில் துவங்கி வஉசி மைதானத்தை வந்தடைந்தது. இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.