கோவை, கூட்செட் சாலையில் அமைந்துள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கோவை சட்டக் கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மாலை நேரத்தில் மெழுகுவர்த்தி கையில் ஏந்தியவாரும் போராட்டம் நடத்தினர்.
