ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து 5-வது நாளாக கோவை வ.உ.சி மைதானத்தில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களை உற்சாகபடுத்த கோவை ஆயுத கலைக்குழுவினர் ஆர்ப்பாட்டத்திடலில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். சிலம்பாட்டம், தெரு நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பாரம்பரிய நிகழ்வுகளை காணும் இளைஞர்கள் ஆர்ப்பரித்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.









