ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாத காரணத்தால் பள்ளி மாணவர்கள் ஆர்பாட்டத்திடலுக்கு வரவில்லை. மாறாக சில பள்ளி மாணவர்கள் பள்ளிக்குள் இருந்தே ஜல்லிக்கட்டுக்கான தங்களது ஆதரவினை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று பள்ளிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளி குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் வ.உ.சி. மைதானம் வந்தனர். காலையில் இருந்து ஆர்ப்பாட்டத்திடலில் அமர்ந்துள்ள அவர்கள் ஜல்லிக்கட்டுக்கான தங்கள் ஆதரவினை கோஷங்களாக எழுப்பி வெளிப்படுத்தி வருகின்றனர்.