'மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மையே இளைஞர்களின் போராட்டத்திற்கு காரணம்', மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோவையில் பேட்டி.



ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெறும் இளைஞர்களின் போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டியுள்ளார்.

கோவையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞர்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிப்பதுடன், மதிப்பளிப்பதாகவும் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு தொடர்பான  அவசர சட்ட நடவடிக்கையை மத்திய, மாநில அரசகள் ஏன் முன்னதாகவே எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிவர், நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மிருகவதை தடை சட்டத்தில் அடிப்படையிலேயே திருத்தம் கொண்டு வந்திருக்கலாம் என்றார். இளைஞர்களின் கோரிக்கையான ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தீர்வு,  சட்டத்திருத்தம் தேவை என்று வலியுறுத்திய அவர், இளைஞர்களின் இந்த எழுச்சி போராட்டம் மக்களின் வாழ்வாதார பிரச்சனைக்கும் தேவை என்றார்.

கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை கட்டும் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பொதுப்பணித்துறையின் ஆய்வு அறிக்கையை தெரிவிக்க வேண்டும்எ ன்று கேட்டுக்கொண்ட அவர் தடுப்பணை கட்டுவது உண்மை என்ற பட்சத்தில் மாநில அரசின் மக்கள் பிரச்சினைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உடன் இருக்கும் எனவும் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...