சென்னையில் புதிய தொழில்நுட்பம் மூலம் அதிவேக இண்டர்நெட் வழங்கும் ஏர்டெல்!!

சென்னை நகரில் 'V-Fiber' எனும் தொழில்நுட்பம் மூலம் அதிவேக பிராட்பேண்ட் வேகத்தினை வழங்குதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர்டெல் பயன்படுத்தியிருக்கும் இந்தத் தொழில்நுட்பம் ஏர்டெல் ஃபிக்சட் பிராட்பேண்ட் சேவையில் அதிபட்சம் நொடிக்கு 100 எம்பி வரையிலான வேகம் வழங்கும் என ஏர்டெல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நிறுவனம்

ஏர்டெல் புதிய தொழில்நுட்பம் வரும் வாரங்களில் 87 நகரங்களில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெக்டோரிசேஷன் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் நிறுவனம் ஏர்டெல் தான் என்றும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேம்பாடு

ஃபைபர் தொவில்நுட்பம் வழங்கும் வேகத்தினை ஈடுகட்ட ஏர்டெல் நிறுவனம் தனது தொழில்நுட்பத்தினை மேம்படுத்தியுள்ளது. புதிய மேம்படுத்தலின் மூலம் ஏர்டெல் பயனர்கள் அதிவேக டேட்டா பெற முடியும்.

சேவை

எச்டி ஸ்ட்ரீமிங் போன்றவற்றைத் தடையில்லாமல் பயன்படுத்த முடியும், பெரிய ஃபைல்களை டவுன்லோடு மற்றும் அப்லோடுகளை செய்ய முடியும் என ஏர்டெல் நிறுவனத்தின் செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம்

ஏர்டெல் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பயனர்கள் புதிய மோடெம் வாங்கினாலே போதுமானது. தற்போதைய ஏர்டெல் பயனர்கள் ‘V-Fiber' வேகத்தினை அனுபவிக்க எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

மகிழ்ச்சி

புதிய மோடெம் வாங்கி வேகத்தில் திருப்தியடையாத பயனர்களுக்கு மோடெம் வாங்கிய பணம் திரும்ப வழங்கப்படும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது. மேலும் இந்தக் கட்டணம் மாத கட்டணத்தில் சரி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பயனர்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவச டிரையல் ஆஃபர் வழங்கப்படுகின்றது.

டிஜிட்டல் வீடு

ஆப்டிக் ஃபைபர் மற்றும் ‘V-Fiber' தொழில்நுட்பத்தின் துணை கொண்டு எதிர்கால டிஜிட்டல் இல்லத்திற்குத் தேவையான இண்டர்நெட் இணைப்புகளை வழங்க ஏர்டெல் தயாராகி விட்டது எனஏர்டெல் நிறுவன தலைவர் அஜய் பூரி தெரிவித்துள்ளார்.

சேவை

ஏர்டெல் நிறுவனம் பிராட்பேண்ட் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் சேவையினை வழங்கி வருகின்றது. இந்தச் சேவையானது தற்சமயம் வரை அனைத்து பிராட்பேண்ட் திட்டங்களுக்கும் வழங்கப்படுகின்றது.

கூடுதல்

டேட்டா ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் அறிவித்த ‘myHome Rewards' திட்டத்தின் மூலம் பிராட்பேண்ட் பயனர்கTள் சுமார் 5 ஜிபி வரை கூடுதல் டேட்டாவை பெற முடியும்.

Newsletter

பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள்: ஆதாரத்துடன் உறுதி செய்த விஞ்ஞானிகள்!

பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹஙà...

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...