கோவையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகள்‌ மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - மாநகராட்சி ஆணையர்

கோவை: கோவையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகள்‌ நோய் தொற்று பரவலில் இருந்து மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகள்‌ நோய் தொற்று பரவலில் இருந்து மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளினாலும்‌, மாநகர மக்களின்‌ ஒத்துழைப்பினாலும்‌ தற்போது கொரோனாவின்‌ பாதிப்பு கட்டுக்குள்‌ உள்ளது.

இந்த நிலையில், கோவையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள்‌, சர்க்கரை நோய்‌, உயர்‌ இரத்த அழுத்தம்‌, புற்றுநோய்‌ உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள்‌ உள்ளவர்களுக்கு நோய்த்தொற்று பரவும்‌ பட்சத்தில்‌ அதிகம்‌ பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள்‌ உள்ள காரணத்தால்‌ அவர்கள்‌ மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும்‌ சளி, இருமல்‌, காய்ச்சல்‌ போன்ற அறிகுறிகள்‌ இருப்பவர்கள்‌ உடன்‌ அருகில்‌ உள்ள ஆரம்ப சுகாதார நிலையம்‌ சென்று தாமதம்‌ செய்யாமல்‌ உடனடியாக பரிசோதனைகளை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில்‌ பொதுமக்கள்‌ அதிகமாக கூடும்‌ இடங்களான வழிபாட்டு தலங்கள், வணிகவளாகங்கள்‌, விளையாட்டு மைதானங்கள்‌, பூங்காக்கள்‌, பேருந்து நிலையங்கள்‌, இரயில்‌ நிலையங்கள்‌, சந்தைகள்‌ மற்றும்‌ உணவகங்கள்‌ போன்ற இடங்களில்‌ கொரோனா தொற்று பரவுவதற்கு வாய்ப்புகள்‌ அதிகம்‌ என்பதால்‌ மேற்கண்ட இடங்களுக்கு செல்லும்‌ பொதுமக்கள்‌, அவ்விடத்தில்‌ பணிபுரியும்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ அங்குள்ள அனைத்து அலுவலர்களும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்‌.

மேலும், திருமணங்கள்‌ மற்றும்‌ விஷேசங்களில்‌ அதிகளவில்‌ கூட்டம்‌ சேருவதை தவிர்த்திடவும்‌, அளவான நபா்களுடன்‌ சமூக இடைவெளியை கடைபிடித்து நிகழ்வுகளை நடத்திடவும்‌ தெரிவிக்கப்படுகிறது. மேலும்‌ கொரோனா தொற்று நடவடிக்கைகளில்‌ பொதுமக்கள்‌ முகக்கவசம்‌ அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே, பொது மக்கள்‌ எங்கு சென்றாலும்‌ தவறாமல்‌ முகக்கவசம்‌ அணியவும்‌, அடிக்கடி சோப்பினால்‌ கைகளைக்‌ கழுவவும்‌ மற்றும்‌ ரோடுகளில்‌ எச்சில்‌ துப்பாமல்‌ இருக்கவும்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. எனவே, பொதுமக்கள்‌ மேற்கண்ட தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து கொரோனா நோய்தொற்றை முற்றிலும்‌ தடுத்திட மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter