கோவை, மதுரை மற்றும் சென்னை காவல் ஆணையர்களை பணியிட நீக்கம் செய்ய வேண்டும், சிபிஐ (ம) செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கோவையில் பேட்டி.


கோவை, மதுரை மற்றும்  சென்னை காவல் ஆணையர்களை பணியிட நீக்கம் செய்ய வேண்டும், என இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி  மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கோவையில் பேட்டி. 

அரசு அதிகாரிகளுக்கான வரம்புகளை மீறி செயல்பட்ட கோவை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட மதுரை, சென்னை காவல் ஆணையர்களை பணியிட நீக்கம் செய்து கிரிமினல் நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ஆறு நாட்களுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் 22 ஆம் தேதிக்கு பின் இரவு முதல் உளவு துறையின் செயல்ப்பட்டால் அரசும், காவல் துறையினரும் போராட்டத்திற்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வேலையில் இறங்கினர். 23 ஆம் தேதி மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், மாலை அவசர சட்டம் நிறந்தரமாகும் வரை இருக்க அனுமதி கேட்டனர், பிறகு மதியம் வரை அவகாசம் கேட்டனர், இறுதியாக வெரும் இரண்டு மணி நேரம் கேட்டனர். ஆனால் காவல் துறையினரின் நடவடிக்கை என்பது இது வரை சமீப காலங்களில் பார்த்திராத அளவு மிக மோசமாக இருந்தது. 

நேரடியாக போலீசார் வன்முறையில் ஈடுபட்டதை பார்க்கும் போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது  தடியடி தாக்குதல், அதே போல் மாணவர்களை போலீசாரிடமிருந்து காப்பாற்ற உதவிய மீனவர்கள் மற்றும் மீனவ குப்பங்களை குறித்து கடுமையாக தாக்கி உள்ளனர். கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் அதிகாரிகளுக்கு உள்ள வரம்புகளை மீறி அங்கிகரிக்கப்பட்ட அமைப்புகளை அடிப்படை ஆதராம் இல்லாமல் தேச விரோதம், சமூக விரோதம் என கூறுவது கடுமையான வார்த்தைகளை பேசி உள்ளார். சமத்துவத்தை பறைசாற்ற தோழர், தோழ என்பது உலகம் முழுவதும் உச்சரிக்கும் வார்த்தை. 

ஆனால் வேறு ஒரு வன்மத்தை வைத்துக்கொண்டு கமிஷ்னர் உங்கள் குழந்தைகளை தோழர் என கூப்பிட அனுமதிக்காதிர்கள் என கூறி உள்ளார். தோழர் என பேசியதால் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பல அமைப்புகளை சேர்ந்தவர்களை தேசத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பியாதாக பேசி உள்ளார். தடியடி என்பது கூட்டத்தை கலைப்பதற்காக மட்டும் தான் நடத்தப்படுகிறது. ஆனால் குறி வைத்து தலையில் தாக்குவது, தனிப்பட்ட வன்மத்தை வைத்து கொடூரமாக தாக்குவது உள்ளிட்ட செயல்களில் போலிஸார் ஈடுபட்டனர். 

நமது சட்டம் வகுத்துள்ள விதிகள் படி தான் தேச துரோக வார்த்தை என வரையறை செய்ய வேண்டும் ஆனால் சட்டத்தை மீறி பொதுவாக அமைப்புகளை குற்றம் சாட்டிய கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜை பணியிடை நீக்கம் செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே போல் சென்னை, மதுரை காவல் ஆணையர்களை பணியிடை நீக்கம் செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...