தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் வெடித்தது மாணவர் போராட்டம்



தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போரட்டங்களில் இறங்கினர். தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் அவசர சட்டம் இயற்றப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மாணவர்களின் இந்த அறப்போராட்டத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தன.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்திம் பாரம்பரிய விளையாட்டான கம்பளா-வுக்கு இருக்கும் தடையை நீக்க வலியுறுத்தி அம்மாநில மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  எருதுகள் பந்தையமான கம்பளா விளையாட்டில் எருதுகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா முறையீடு செய்த வழக்கில் அவ்விளையாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது.

தங்கள் பாரம்பரிய விளையாட்டுக்கு இருக்கும் தடையை நீக்க வேண்டும் என்று கர்நாடக மாணவர்கள் மற்றும் மக்கள் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.மேலும், கன்னட பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்திவருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா-வின் அரசு கம்பலா விளையாட்டுக்கு ஆதரவாக இருக்கிறது. இருந்த் போதும், உச்ச நீதிமன்றம் தடை வித்துள்ளதால் விளையாட்டை நடத்தமுடியாத சூழல் உருவாகியிருப்பதாக சித்தராமையா கூறியுள்ளார். மேலும், தேவைப்பட்டால் தமிழகம் போல கர்நாடகத்திலும் அவசரச்சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...