பட்டா வழங்கக் கோரி மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு


மேட்டுப்பாளையம் பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் சார்பில் மேட்டுப்பாளையம் சமத்துவக் கழகம் மகளிர் அணி செயலாளர் சித்ரா, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், பெள்ளாதி கிராமம் பகுதியில் உள்ள பஞ்சமி நிலம் சுமார் 4.22 ஏக்கரில் தாழ்த்தப்பட்ட மக்கள் 100 குடும்பம் கடந்த 6 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.

இப்பகுதியில் பட்டா வழங்கக் கோரி பல முறை வலியுறுத்தி மனு அளித்தும், பல வழிகளில் முயற்சித்தும் பட்டா வழங்கவில்லை.

இப்பகுதியில் இருந்து சுமார் 60 குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். பட்டா இல்லாததால் மின் விளக்கு இன்றி படிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.

அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, கழிப்பிடம் உள்ளிட்டவை எதுவும் பட்டா இல்லாமல் செய்துகொடுக்க மறுக்கின்றனர்.

எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய  நடவடிக்கை மேற்கொண்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...