21 டேன்ஸ் ஸ்டூடியோ-வின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா வரும் பிப்ரவரி 5-ம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது


கோவை மாவட்டம், இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் 21 டேன்ஸ் ஸ்டூடியோவில் பல்வேறு விதமான நடனப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த நடனப் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டு 3-ம் ஆண்டு துவக்க விழா "சாலிடிஃபை" என்னும் தலைப்பில் வரும் பிப்ரவரி 5ம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது.

அன்றைய தினம் கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் அமைந்துள்ள கலையரங்கில் மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிச்சைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சசி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். 

மேலும், விஜய் டிவியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் புகழ்பெற்ற சையது சுபஹான், இசை அமைப்பாளர் ஜோன்ஸ் ருபர்ட், "காதல் கண்கட்டுதே" திரைப்பட நடிகை திவ்யா என்னும் அதுல்யா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

மேலும், Mrs.  இந்தியா யெர்த் 2016 விருது பெற்றவரான ஜெயா மகேஷ் மற்றும் கேளராவில் ஐஏஎஸ் அதிகாரியான உமேஷ் ஆகியோர் கவுரவத் தலைவர்களாக பங்கேற்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சி குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், 21 டேன்ஸ் ஸ்டூடியோவின் "சாலிடிஃபை" நிகழ்ச்சியில் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு பாடல்களுக்கு நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 800 முதல் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏராளமானோர் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...