கோவை மேற்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தலைமையில் குறைதீர் கூட்டம்



கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவிக்கையில், "மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தலைமையில் ஐந்து மண்டலங்களிலுள்ள உதவி ஆணையர்களின் மேற்பார்வையில் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனம் ஐந்து மண்டலங்களிலும் திங்கள் முதல் வெள்ளி வரை அந்தந்த வார்டுகளுக்குச் சென்று பொது மக்களிடம் மனுக்கள் பெற்று வருகின்றது. 

மேலும், பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் உடனடியாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 2017 முதல் ஐந்து மண்டலங்களில் மாதத்தின் முதல் வாரம் நடைபெறும். இதில் பொதுமக்கள் மனுக்களை மாநகராட்சி ஆணையரிடம் வழங்குவர்.

அதனை தொடர்ந்து மாதத்தின் முதல் நாளான இன்று மேற்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் (பொ) தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களாக தெரு விளக்குகள், குப்பைத் தொட்டிகளை அகற்றுதல், குடிநீர் குறைபாடு, சாக்கடை தூர்வாறுதல், அடிப்படை வசதி என பல்வேறு உதவிகள் கோரி 10 மனுக்கள் பெறப்பட்டது. 

இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் (பொ) ப.காந்திமதி தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் உதவி ஆணையர் கே.ராமைய்யா, மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.எம்.திவாகர், உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...