புதிய பட்ஜெட் தாக்கல் வளமானதாக உள்ளது என இணைத் தலைவர் மற்றும் மருத்துவ பிரிவு இயக்குநர் மனிஸ்பங்கர் தகவல்

மத்திய அரசின் நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி தற்போது தாக்கல் செய்துள்ள புதிய பட்ஜெட்டானது வளமானதாக அமைந்துள்ளது என இணைத் தலைவரும் நோவா ஃபெர்ட்டிலிட்டி மையத்தின் மருத்துவ பிரிவு இயக்குநருமான மனிஸ்பங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டிற்கான பட்ஜேட்டானது ஒரு சுகாதார கண்ணோட்டத்தில், பட்ஜெட் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததாக உள்ளது. அரசாங்கத்தின் நோக்கம் நாடு முழுவதும் அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை விரிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. 

மேலும், உயிர் காக்கும் மருந்துகளின் விலை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

சுகாதார மற்றும் ஊட்டச்சத்து, திறன் மேம்பாடு, எல்லாவற்றிற்கும் மேலாக கிராமப்புரங்களில் வேலை வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக நிதி ஒதுக்கீடு, பெண்களுக்கான அதிகாரத்தினை அதிகரிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவு இந்த வரவு செலவு திட்டத்தின் நல்ல அம்சம் ஆகும்.

மேலும், மருத்துவத்தில் 5 ஆயிரம் புதிய போஸ்ட் கிராஜுவேட் (தங்கும்) இடங்களை அறிமுகப்படுத்தும் அறிவிப்பு நாட்டில் மருத்துவக் கல்வியில் சீர்திருத்தங்களை கொண்டு வரும். இரண்டு மாநிலங்களில் மருத்துவ அறிவியல், இரண்டு புதிய அகில இந்திய கழகம் (எய்ம்ஸ்) அமைப்பதற்கான அறிவிப்பு, குஜராத் மற்றும் ஜார்க்கண்ட் பகுதிகளுக்கு வரவு- செலவுத் திட்டத்தில் மற்றொரு சாதகமான அம்சமாக உள்ளது என இணைத் தலைவர் மற்றும் மருத்துவ பிரிவு இயக்குநர் மனிஸ்பங்கர் தெரிவித்துள்ளார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...