கோவையில் ஜுவல் ஒன் நிறுவனத்தின் 'பைன் டைமண்ட் ஜுவல்லரி' புதிய பிரிவு துவக்கம்

கோவை ஜுவல் ஒன் நிறுவனத்தில், 'பை டைமண்ட் ஜுவல்லரி' எனும் புதிய பிரிவு துவக்கப்பட்டு உள்ளது. கிராஸ்கட் ரோட்டில் அமைந்து உள்ள ஜுவல் ஒன் நிறுவனத்தில், 500 சதுர அடி பரப்பளவில், 'பைன் டைமண்ட் ஜுவல்லரி' என்ற வைர விற்பனை பிரிவு, புதியதாக துவக்கப்பட்டுள்ளது.



இது குறித்து ஜுவல் ஓன் முதன்மை நிர்வாக இயக்குனர் பி.ஜி.கிஷோர் பேசுகையில்:– எம்ரால்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் ஜுவல் ஒன் நிறுவனத்தின், சிறந்த கட்டமைப்பு மற்றும் நவீன இயந்திரங்கள் மூலம், வைர நகை வடிவமைப்பு மற்றும் விற்பனையில், எங்கள் நிறுவனம் முன்னிலையில் இருந்து வருகிறது. 

எங்களது நிறுவனத்தில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடிவமைப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வைரம் சார்ந்த அனைத்து பணிகளும், எங்கள் நிறுவனத்திலேயே நடைபெறுவதனால், குறைந்த  விலையில், வைரங்களை விற்பனை செய்ய முடிகிறது. 3.5 லட்சம் டிசைன்கள் தமிழகத்தில் 13 இடங்களில், ஜுவல் ஒன் கிளைகள் செயல்பட்டு வருகிறது. இதுதவிர, மும்பை, கேரளா, பெங்களூர், சிங்கப்பூர் மற்றும் மலேசிய உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளது. 

புதிய பிரிவுகளில், நவீன மற்றும் பாரம்பரிய, கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட, தங்கம் மற்றும் பிளாட்டினத்துடன் கூடிய, 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வடிவமைப்பிலான, வைர நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் மனநிறைவே, நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சீனிவாசனின், முக்கிய குறிக்கோளாகும். எனவே, எங்களது வாடிக்கையாளர்களுக்கு, நாங்கள் விற்பனை செய்யும் வைர நகைகளுக்கான தர சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதில், வைரத்தின் தரம், வண்ணம், எடை ஆகியவை இடம்பெற்றிருக்கும். மேலும், வாடிக்கையாளர்கள் வழங்கும் வடிவமைப்பினை 20 நாட்களில் செய்து தருகிறோம். துவக்க விழாவை முன்னிட்டு, ஒரு காரட் சவர நகைக்கு, ரூ.5 ஆயிரம் வீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவித்தார்.



விழாவில், நிர்வாக துணை பொதுமேலாளர் முத்துக்குமார், வைர பொருட்களின் தலைமை அதிகாரி சஞ்சேஷ், மார்க்கெட்டிங் தலைமை அதிகாரி விஜயக்குமார், மேலாளர் வாசுதேவ ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...