மன்காரா, லக்கிடி ரயில் நிலையங்களின் இடையில் ரயில்வே பாலம் கட்டுமானப் பணி நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம்

மன்காரா மற்றும் லக்கிடி ரயில் நிலையங்களின் இடையில் ரயில்வே பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருவதால் நாளை (பிப். 23) முதல் பிப்ரவரி 27ம் தேதி வரை அந்த நிலையத்திற்கான ரயில் சேவையில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

1. கோவை- மேட்டுப்பாளையம்- கோவை சிறப்பு பயணிகள் ரயில் எண் 06152 மற்றும் 06153 ரத்து

2. ரயில் எண் 56604 சொரனூர்- கோவை பயணிகள் ரயில் ரத்து

3. ரயில் எண் 56650 கண்ணூர்- கோவை பயணிகள் ரயில், மற்றும் ரயில் எண் 56651 கோவை- கண்ணூர்பயணிகள் ரயில் சொரனூர் ரயில் நிலையம் முதல் கோவை வரை ரத்து.

4. ரயில் எண் 56605 கோவை- திருச்சூர் பயணிகள் ரயில் கோவை ரயில் நிலையம் முதல் சொரனூர் வரை ரத்து

5. ரயில் எண் 13352 ஆழப்புலா- தன்பாத் எக்ஸ்பிரஸ் 90 நிமிடங்கள் தாமதமாக ஆழப்புலா ரயில் நிலையத்திற்கு வரும். சொரனூர் சத்திப்பில் இருந்து ஒட்டப்பாளையம் இடைப்பட்ட தூரத்தைக் கடக்க 45 நிமிடங்கள் அதிகமாக எடுத்துக்கொள்ளும்.

6. ரயில் எண் 12678 எர்னாக்குளம்- பெங்களூரு இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் மன்னனூரில் இருந்து ஒட்டப்பாளம் ரயில் நிலையத்திற்கு இடையிலான தூரத்தை 75 நிமிடங்கள் தாமதமாக கடக்கும்.

பிப்ரவரி 27ம் தேதியன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில் சேவைகள்:-

1. ரயில் எண் 56650 கண்ணூர்முதல் கோவை வரும் பயணிகள் ரயில் மற்றும கோவையில் இருந்து கண்ணூர்செல்லும் பயணிகள் ரயில் ஆகிய இரு ரயில்களும் சொரனூர் ரயில் சந்திப்பில் இருந்து கோவை ரயில் சந்திப்பு வரை இயக்கப்படாது. 

2. ரயில் எண் 56605 கோவை- திருச்சூர் பயணிகள் ரயில் பாலக்காட்டில் இருந்து திரிசூர் வரை ரத்து செய்யப்பட்டள்ளது.

3. ரயில் எண் 22637 சென்னையில் இருந்து மங்களூர் வரை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் பாலக்காடு ரயில் நிலையத்தில் இருந்து 45 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...