தலைமை செயலக வாசல் முன்பு சீருடையில் தலைமை காவலர் தனது மகளுடன் திடீர் சாலை மறியல்!

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் தனது மகளின் வலது கால் பாதிக்கப்பட்ட நிலையில், தவறான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை செயலகம் வாயில் முன்பு தலைமை காவலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.



சென்னை: சென்னை தலைமைச் செயலகம் வாசலில் சீருடையில் இருந்த தலைமை காவலர் தனது மகளோடு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் கோதண்டபாணி. இவருக்கு பிரதீக்‌ஷா என்ற 10 வயது மகள் உள்ளார்.

இந்நிலையில், பிரதீக்‌ஷா தனது 3 வயது முதல் சிறுநீரக பிரச்சனை (Nephrology)காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை கடந்த 5 வருடங்களாக உட்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், மாத்திரையின் எதிர்விளைவு காரணமான பிரதிக்‌ஷாவின் வலது கால் பாதத்தில் அரிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, மீண்டும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பிரதீக்‌ஷாவுக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக தவறாக கணித்ததன் விளைவாக பாதத்திற்கு ரத்தம் செல்லாமல் கருப்பு நிறமாக மாறியதுடன் உடலில் உள்ள ரத்தம் கெட்டுப் போனதாக கூறப்படுகிறது.

மேலும் தங்கள் அனுமதியின்றி ரத்த சுத்திகரிப்பு (Dialysis)செய்யப்பட்டதன் விளைவால் வலிப்பு நோயும் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சிய போக்கால் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.



எனவே இதற்கு காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி கோதண்டபாணி பாதிக்கப்பட்ட தனது மகளுடன் தலைமை செயலக வாயில் முன்பு திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.



தலைமை காவலரின் இந்த திடீர் போராட்டத்தின் காரணமாக தலைமை செயலகம் வெளியே சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...