திருப்பூரில் போலி கிளினிக்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்!

திருப்பூர் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் இயங்குகின்ற மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள், மருந்தகங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கரட்டாங்காட்டில் செயல்பட்டு வந்த யஷ்வந்த் என்ற கிளினிக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் முறைகேடாக செயல்பட்டு வந்த மேலும் ஒரு கிளினிக்கிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் இயங்குகின்ற மருத்துவமனைகள் மற்றும்கிளினிக்குகள், மருந்தகங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர்-தாராபுரம் சாலையில் உள்ள கரட்டாங்காடு பகுதியில் யஷ்வந்த் என்ற கிளினிக் முறைகேடாக செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் வினீத்திற்கு புகார் வந்தது. அவர் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டார்.



இதனை தொடர்ந்து மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு, அலுவலக கண்காணிப்பாளர் ரமேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று யஷ்வந்த் கிளினீக்கில் ஆய்வு செய்தனர்.



அப்போது கடந்த 2019ஆம் ஆண்டு வேறு ஒருவரின் பெயரில் உரிமம் பெற்று, அண்ணாத்துரை என்பவர் பயன்படுத்தி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இந்த முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அண்ணாத்துரை ஆயுர்வேத மருத்துவம் படித்துவிட்டு, அலோபதி சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.



இதனைத்தொடர்ந்து உரிய அனுமதி பெறாமல் முறைகேடாக செயல்பட்ட கிளினீக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...