கோவை காட்டூர் முத்துமாரியம்மனுக்கு ரூ.6 கோடி பணத்தில் சிறப்பு அலங்காரம்!

தமிழ் புத்தாண்டையொட்டி கோவையில் உள்ள காட்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் 6 கோடி ரூபாய் பணம், நகை மற்றும் பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.



கோவை: ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நாளில் காலையிலேயே சித்திரை கனியான பழங்களை பார்த்து கண்விழிப்பதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இதேபோல், கோவில்களிலும் சிறப்பு அலங்காரம், பூஜை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது.

அதன்படி, கோவை காட்டூர் பகுதியிலுள்ள முத்து மாரியம்மன் திருக்கோவிலில் 83வது சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடபட்டு வருகிறது.



இக்கோவிலில் சித்திரை முதல்நாளான இன்று 100,200,500,2000 ரூபாய் நோட்டுக்கள் என சுமார் 6 கோடி மதிப்பிலான பணத்தை கொண்டும் தங்க, வைர ஆபரணங்களை கொண்டும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு சிறப்பு பூஜை செய்யபட்டது.



இதனை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதேபோல் கோவையிலுள்ள பல்வேறு கோவில்களிலும் சிறப்பு அலங்காரம், பூஜையுடன் தமிழ் புத்தாண்டு கொண்டாடபட்டது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...