பஞ்சாப் துப்பாக்கிச் சூடு - பலியான 2 தமிழக வீரர்களின் உடல்கள் கோவை வருகை!

பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ முகாமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான 2 வீரர்களின் உடல் தமிழகம் கொண்டுவரப்பட்டது. வீரர்களின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் தேனி மாவட்டம் தேவாரத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளது.



கோவை: பஞ்சாப் மாநிலம் பதின்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களில் ஒருவர், சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த வனவாசியை சேர்ந்த தறி தொழிலாளியின் மகன் கமலேஷ். 24 வயதான கமலேஷ்க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து ராணுவத்தில் சேவையாற்றி பணியாற்றி வந்த அவர், நேற்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வீரமரணம் அடைந்தார்.



இதையடுத்து, இராணுவ வீரர் கமலேஷ் உடல் இன்று காலை சிறப்பு விமானம் மூலம் கோவை சர்வதேச விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ராணுவ வீரர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.



கோயம்புத்தூரில் இருந்து சேலத்திற்கு ஒரு மணி நேரத்திற்குள் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் கொண்டு செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மற்றொரு தமிழக வீரர் தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த 23 வயதான யோகேஷ் குமார் ஆவார். வீட்டிற்கு ஒரே மகனான இவர், ராணுவத்தில் சேர்ந்து சேவையாற்றி வந்ததுடன், தனது பெற்றோர்களுக்கு புதிதாக வீடும் கட்டிக்கொண்டு வந்துள்ளார்.

திருமணம் செய்ய பெற்றோர் வரன் பார்த்து வந்த நிலையில் யோகேஷ்குமார் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ளார். இவரது உடல் சிறப்பு விமானம் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து சொந்த ஊரான தேனிக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

Newsletter

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...