ரஃபேல் வாட்ச் பில் தானே கேட்டீர்கள்.. சீரியல் நம்பர் கேட்டீர்களா? - எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி

கோவை சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன், அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் பில் தொடர்பான கேள்விக்கு, பில் கேட்டீர்கள் பில் வந்ததா? இல்லையா? பில் கேட்டீர்கள், பில் சீரியல் நம்பர் கேட்டீர்களா? எனப் பதிலளித்தார்.



கோவை: கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து கோவில்களுக்கும் மாதம் ஐந்து லிட்டர் தீப எண்ணெய் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளதாக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.



கோவையில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெற்கு தொகுதிக்குட்பட்ட திருக்கோவில்கள் மேம்பாட்டிற்காக ஆலயம் எனும் திட்டத்தை துவக்கி வைத்தார்.



காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியிலுள்ள மதுரை வீரன் கோவிலில், இத்திட்டத்தை துவக்கி வைத்த அவர் முதற்கட்டமாக சுமார் 20 கோவில்களுக்கு தலா 5 லிட்டர் தீப எண்ணெயை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது:



தெற்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து கோவில்களுக்கும் மாதம் ஐந்து லிட்டர் தீப எண்ணெய் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கோவில்களை ஒருங்கிணைக்கும் தன்னார்வ குழு உருவாக்கப்பட்டுள்ளது. தொகுதியிலுள்ள 20 கோவில்களுக்கு மாதம் தோறும் தீப எண்ணெய் வழங்குவது உட்பட கோவில் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்வது என தீர்மானித்துள்ளோம்.

கோவிலில் பூ கட்டும் பெண்களுக்கு அரசின் திட்டங்களை பெற்று தரும் பணிகளும் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு ஊரிலும் கல்வி சாலையை போல் கோவில்களும் முக்கியம். நிறைய இடங்களில் கோவில்களுக்கு வருமானம் இல்லாத நிலையில், பூஜை முறைகளிலிருந்து விலகி செல்வதால் அவர்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

எந்த சூழலிலும் கோவில்களில் விளக்கேற்றாமல் இருக்க கூடாது என்பதற்காக இப்பணியை துவங்கியுள்ளோம். வரக்கூடிய காலங்களில் இந்த திட்டம் விரிவு படுத்தப்படும். தீப ஒளியை போல் இந்த தொகுதி மக்களின் வாழ்விலும் ஒளி உண்டாகும்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல் மக்கள் மன்றத்தின் முன்பாக விவாத பொருளாக உள்ளது. தமிழக அரசியலில் விவாதத்தை மாநில தலைவர் வைத்துள்ளார். எதையும் சந்திக்க தயார் எனக் கூறி திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டுள்ள நிலையில், நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என திமுகவினர் நாடினால் அதையும் சந்திக்க பாஜக தயாராக உள்ளது.

இதைத் தொடர்ந்து அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் பில் தொடர்பான கேள்விக்கு, பில் கேட்டீர்கள் பில் வந்ததா? இல்லையா? பில் கேட்டீர்கள், பில் சீரியல் நம்பர் கேட்டீர்களா? எனப் பதிலளித்தார்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...