கோவை தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா - பக்தர்கள் திருவிளக்கு பூஜை வழிபாடு

கோவையில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா, கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.



தினந்தோறும் அம்மனுக்கு மகா கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில் இன்று பக்தர்களின் திருவிளக்கு பூஜை வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது.



300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.



தொடர்ந்து வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

வரும் நாட்களில் அம்மன் திருக்கல்யாண உற்சவம், மஞ்சள் நீர், சக்தி கரகம், அக்னி தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சி என வரும் 30ஆம் தேதியுடன் தண்டுமாரியம்மன் சித்திரை திருவிழா முடிவடைகிறது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...