உடுமலை அமராவதி அணையை தூர்வாருவதில் நடப்பாண்டிலும் சிக்கல் - அதிகாரிகள் தகவல்!

உடுமலையில் உள்ள அமராவதி அணை கடந்த 64 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால், மொத்த கொள்ளளவில் 15 - 20 சதவீதம் மணல் மற்றும் வண்டல் மண் தேங்கியுள்ளது. 54 அடிக்கும் மேல் தண்ணீர் இருப்பு காரணமாக இந்தாண்டும் தூர்வாருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அமராவதி அணையில் நீர் மட்டம் அதிகரிப்பின் காரணமாக இந்தாண்டும் தூர்வாரும் பணி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை 1958 ஆம் ஆண்டு கட்டப்பட்டு 1959 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. அமராவதி அணையானது, 4 டி.எம்.சி. கொள்ளளவும், ஆண்டுக்கு 10 டி.எம்.சி நீர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.



இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் மூன்று போகமும் நெல் சாகுபடியும், புதிய ஆயகட்டு பாசன நிலத்தில் கரும்பு, தென்னை, காய்கறி, தானிய வகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன .

இந்நிலையில், அமராவதி அணை கடந்த 64 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் மொத்த நீர் தேங்கும் பரப்பில் 15 முதல் 20 சதவீதம் வரை மணல் மற்றும் வண்டல் மண் தேங்கியுள்ளது. இவற்றை முறையாக அகற்றி தூர் வாரினால் 800 மில்லியன் கன அடி நீர் திறக்க முடியும்.

மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை பாசன நிலங்களுக்கு கூடுதலாக வழங்கவும் அணையை தூர்வார வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக பட்ஜெட்டில் அமராவதி அணை தூர்வாரப்பட்டு பழைய கொள்ளளவு நிலைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது.

அணை தூர்வாரப்பட்டால் எடுக்கப்படும் மணல் வண்டல் மண் வாயிலாக அரசுக்கு வருவாய் கிடைக்கும். விளை நிலங்களில் மண்வளம் பெருகும். கடந்த மூன்று ஆண்டுகளாக பருவமழைகள் திருப்தியாக பெய்து அணை நீர்மட்டம் குறையாத காரணத்தால் தூர்வாரப்படவில்லை.

தற்சமயம் அமராவதி அணை மொத்த 90 அடியில் 54.50 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் நடப்பு ஆண்டும் தூர்வாரும் பணிக்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,

ஒவ்வொரு ஆண்டும் திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பி வைக்கப்படுகின்றது. 25 அடிக்கும் குறைவாக ஏப்ரல் மாதத்தில் நீர் இருப்பு இருந்தால் மட்டும் தூர்வார முடியும். நிதி தயாராக இருந்தாலும் நீர் இருக்கும் உள்ளதால் இப்பணி துவங்க முடியவில்லை, என்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...