உடுமலை அருகே தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் - பொதுமக்கள் அச்சம்!

உடுமலை அடுத்த திருமூர்த்திமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானை கூட்டம், திருமூர்த்தி நகர் பி.ஏ.பி., அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள, விவசாயி ஆறுமுகம் தோப்பிற்குள் கம்பி வேலியை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளன.


திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சுற்றுவட்டார கிராமங்களில் புகுந்த காட்டு யானை கூட்டம், தென்னை மரங்கள் மற்றும் கம்பி வேலிகளை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால், யானை கூட்டம் நீர் தேடி திருமூர்த்தி அணைப் பகுதியில் முகாமிட்டு உள்ளன.



இந்த நிலையில், அதிகாலை 2 மணிக்கு, திருமூர்த்தி நகர் பி.ஏ.பி., அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள, விவசாயி ஆறுமுகத்திற்கு சொந்தமான தென்னந்தோப்புக்குள் மூன்று குட்டிகளுடன் கூடிய, 11 யானைகள் கொண்ட கூட்டம், கம்பி வேலியை உடைத்து புகுந்துள்ளன.



அப்போது, அங்கிருந்த, 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை முறித்து, குருத்துக்களை சாப்பிட்டுள்ளன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.

இதேபோல் கடந்த வாரம், ஐந்து தோப்புகளுக்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே திருமூர்த்தி நகர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், இலங்கை அகதிகள் முகாம், பி.ஏ.பி., அலுவலகங்கள், குடியிருப்புகள், தென்னை வளர்ச்சி வாரியம், குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் யானைக்கூட்டம் அதிகரித்துள்ளதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், வன எல்லை பகுதிகளுக்கும் யானைகள் வருவதை தடுக்க, அவற்றுக்கு உணவு, குடிநீர் வசதி செய்யவும், கண்காணிக்கவும், 200 மீட்டர் நீளத்திற்கு அகழி, சோலார் வேலி அமைக்கவும், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...