கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலத்தை குத்தகைக்கு மட்டுமே விடப்படும்..! - நிதியமைச்சர் பி.டி.ஆர் தகவல்!

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழக அரசு வழங்கும் நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையம்/யூனியன் அரசாங்கத்திற்கு குத்தகைக்கு மட்டுமே விடப்படும் என்றும், அதன் உரிமையை மத்திய அரசுக்கு முழுமையாக வழங்கப்படாது எனவும் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலத்தை அதன் உரிமையை முழுவதுமாக மத்திய அரசுக்கு மாற்றப்படாது என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசு இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு தேவையான நிலத்தை குத்தகைக்கு மட்டுமே வழங்கும். முன்பு போல உரிமையை மத்திய அரசுக்கு மாற்றாது.

விமான நிலையம் இந்திய விமான நிலைய ஆணையத்தால் இயக்கப்படும் வரை குத்தகைத் தொகை குறைந்தபட்ச டோக்கன் மதிப்பில் வைக்கப்படும் என்ற ஷரத்து குத்தகையில் அடங்கும்.

விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவெடுத்தால், தமிழகத்திற்கான குத்தகை தொகையானது நிலத்தின் அப்போதைய சந்தை மதிப்பைப் பிரதிபலிக்கும், அல்லது விமான நிலையத்தில் அப்போதைய சமமான பங்குகளை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும்.

மாநில அரசின் அனுமதியின்றி (டோக்கன் மதிப்பு மற்றும் குத்தகைக் கட்டணத்தில்) நிலத்தை ஒரு தனியார் ஆபரேட்டருக்கு (சலுகை குத்தகை வாடகையில்) துணை குத்தகைக்கு வழங்க அவர்களுக்கு உரிமை இருக்க வேண்டும் என்ற இந்திய விமான நிலைய ஆணையத்தின் பரிந்துரையை தமிழ்நாடு நிராகரித்து விட்டது.

இவ்வாறு நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...